மணப்பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாக ரகளை.. கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட திருமணம்..

0 3651
சென்னை கொடுங்கையூரில் திருமண மண்டபத்திற்குள் புகுந்த வாலிபர், மணப்பெண் தன்னை ஏமாற்றியதாகக்கூறி தனது நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்ட நிலையில் திருமணம் நிறுத்தப்பட்டது.

சென்னை கொடுங்கையூரில் திருமண மண்டபத்திற்குள் புகுந்த வாலிபர், மணப்பெண் தன்னை ஏமாற்றியதாகக்கூறி தனது நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்ட நிலையில் திருமணம் நிறுத்தப்பட்டது.

வியாசர்பாடியை சேர்ந்த பெண்ணிற்கும் முகலிவாக்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் திங்கட்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மணப்பெண்ணின் முன்னாள் காதலன் என கூறப்படும் வஹாத் அலி என்பவர் தனது நண்பர்களுடன் மண்டபத்திற்குள் குடிபோதையில் புகுந்து, ரகளையில் ஈடுபட்டார்.

இதனால் மணமகனின் நண்பர்கள், மணப்பெண்ணின் உறவினர்கள் ஆகியோர் வஹாத் தரப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது மோதலாக மாறிய நிலையில் அங்கிருந்த நாற்காலிகளை வீசி எறிந்து தாக்கிக் கொண்டனர். இதில் மணமகனின் உறவினர்கள், வஹாதின் நண்பர்கள் காயமடைந்தனர்.

இந்த சண்டையில் மண்டபம் களேபரமான நிலையில், மணமகன் குடும்பத்தினர் திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments