மதிய உணவில் பல்லி.. 16 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

0 3442

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அங்கன்வாடி பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படும் நிலையில், அதனை சாப்பிட்ட 16 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சோமலாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அந்த அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்து இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

குழந்தைக்கு சோறு ஊட்டி விடுவதற்காக அங்கன்வாடி மையத்திற்கு வந்த பெற்றோர் ஒருவர் இதனை கவனித்த நிலையில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட ஒரு குழந்தை மயங்கி விழுந்துள்ளது.

இதனையடுத்து, அங்கு மதிய உணவு அருந்திய அனைத்து குழந்தைகளும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவம் குறித்து அங்கன்வாடி மைய ஊழியர் அஞ்சலி, மல்லிகா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments