தந்தை பணம் கொடுக்காததால் 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த மகன்..

0 2891
தெலுங்கானாவில், தந்தை பணம் கொடுக்காததால் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை செய்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கானாவில், தந்தை பணம் கொடுக்காததால் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை செய்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நிஜாமாபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாய்குமார் என்ற அந்த மாணவன், கல்லூரியில் பணிபுரியும் நபரின் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற போது, விபத்தில் பைக் சேதமடைந்ததோடு, சாலையில் சென்ற இரண்டு பேரும் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் சாய்குமாரை அந்த கல்லூரிக்கு அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தனது தந்தைக்கு போன் செய்த சாய்குமார் நடந்த சம்பவங்களை கூறி பைக்கை சரி செய்யவும், காயமடைந்த இளைஞர்களுக்கு சிகிச்சைக்கு பணம் வேண்டும் என கேட்டிருக்கிறான்.

ஆனால், பணம் கொடுக்க சாய்குமாரின் தந்தை மறுத்துவிட்ட நிலையில், செய்வதறியாமல் விரக்தியடைந்த சாய்குமார், மூன்றாவது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments