இனி இரவு நேரத்திலும் போஸ்ட்மார்ட்டம்! - மத்திய அரசு

0 3199
போஸ்ட் மார்ட்டம் என்ற உடல் கூறாய்வை சூரியன் மறைந்த பிறகு நடத்தக்கூடாது என்ற ஆங்கிலேயர் கால நடைமுறைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

போஸ்ட் மார்ட்டம் என்ற உடல் கூறாய்வை சூரியன் மறைந்த பிறகு  நடத்தக்கூடாது என்ற ஆங்கிலேயர் கால நடைமுறைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

விபத்தில் இறந்தவர்களின் உடல்களை சூரியன் மறைந்த பிறகு , அதாவது பின்மாலை மற்றும் இரவு நேரத்தில் போஸ்ட் மார்ட்டம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது.

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி மின்சார வசதி குறைவாக இருந்த காலத்தில் இந்த கட்டுப்பாடு பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால்,இந்த கட்டுப்பாட்டால், இறந்தவர்களின் உறவினர்கள் பெரும் மன உளைச்சலை சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது நாட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் அதிகரித்துள்ளதால், இந்த கட்டுப்பாட்டை விலக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மருத்துவமனைகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் சூரியன் மறைந்த பிறகும் போஸ்ட் மார்ட்டம் செய்யலாம் என்ற மாற்றம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது, போஸ்ட் மார்ட்டங்களை தாமதமின்றி நடத்தவும்,   உடல் உறுப்பு தானத்தை தாமதமின்றி நடத்தவும் உதவிகரமாக  இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரவு நேரத்தில் போஸ்ட் மார்ட்டம் நடத்துவதால், தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் கலைக்கப்படாமல் பார்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட மருத்துவமனை  பொறுப்பு அதிகாரியின் கடமை என்றும் சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இரவு நேரத்தில் நடத்தப்படும் எல்லா போஸ்ட் மார்ட்டங்களும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தாலும், கொலை, தற்கொலை, பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்டவர்கள், அழுகிப்போன சடலங்கள் போன்றவற்றை, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற நிலை இருந்தால் ஒழிய இரவு நேரத்தில் போஸ்ட் மார்ட்டம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments