சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

0 2062
புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் மழை பாதிப்புக்கான நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் மழை பாதிப்புக்கான நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பெய்த கனமழையால் குடியிருப்புகளிலும் விளைநிலங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து, கட்டட  தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கும் மீனவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய்  நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும்  நிவாரணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்த நிலையில், சிவப்பு ரேஷன்கார்டு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments