நிவாரணமே வேண்டாம்.. குஷ்பு தாமதமாக வந்ததால் கடுப்பான மக்கள்..

0 3352

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, நிவாரணம் வழங்க வந்த நடிகையும், பா.ஜ.க.நிர்வாகியுமான குஷ்பு, நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததால், நிவாரணம் வாங்க வந்தவர்கள் பா.ஜ.க.வினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பட்டினப்பாக்கம் டுமில் குப்பம் பகுதியிலுள்ள 300 பேருக்கு நிவாரணப் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் பா.ஜ.க.சார்பில் வழங்கப்பட்டிருந்தது. 10 மணியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அங்கு ஏராளமான பெண்கள் வந்து காத்திருந்தனர்.

ஆனால், குஷ்பு வர தாமதமான நிலையில் வெயில் அதிகரித்ததால், பொறுமையை இழந்த பெண்கள் பா.ஜ.க.வினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு சிலர் நிவாரணமே வேண்டாம் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பின்னர், முக்கால் மணி நேரம் தாமதமாக 10.45 மணியளவில் வந்த நடிகை குஷ்பு, நிவாரணமாக 150 மில்லி லிட்டர் பாலும், ஒரு பிரட் பாக்கெட்டையும் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments