நாட்டில் 9 மாதங்களில் இல்லாத அளவாக 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

0 2669

இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு பத்தாயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

நேற்று 10 ஆயிரத்து 229ஆக இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு, இன்று மேலும் குறைந்து 8,865ஆக பதிவாகியுள்ளது. பெருந்தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,926 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 49ஆயிரத்து785 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் விகிதம் ஒரு சதவீதத்திற்கும் கீழ் குறைந்து 0.38சதவீதமாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments