டெல்லி காற்று மாசினைக் கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

0 2159

டெல்லியில் காற்று மாசினைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய- மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால், அரசு ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணியாற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றுமாசை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டுமான நடவடிக்கைகள், தேவையற்ற தொழில்களை நடத்துதல், போக்குவரத்து மற்றும் அனல்மின்நிலையங்கள் போன்றவையே காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

காற்றுமாசைக் கட்டுப்படுத்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகளும், மத்திய அரசும் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

விவசாயக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு அக்டோபர், நவம்பர் மாதங்களில் மட்டுமே இருப்பதாக மத்திய அரசின் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், டெல்லி காற்று மாசுவிற்கு விவசாய கழிவுகளை எரிப்பது மட்டும் காரணமல்ல என்றும் குறிப்பிட்டனர். இருப்பினும் பஞ்சாப், ஹரியானாவில் மாநிலங்களில் வைக்கோல் எரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

டெல்லி அரசைப் பின்பற்றி, அண்டை மாநிலங்களும் அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கலாம் என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments