டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு.! மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்

0 1857

டெல்லியில் காற்று மாசினால் மருத்துவர்களிடம் செல்லும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

டிஜிட்டல் சமூகம் சார்ந்த இயங்குதளமான LocalCircles நடத்திய ஆய்வில், 2வது வாரமாக காற்று மாசின் தாக்கம் பொதுமக்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதனால் டெல்லியில் உள்ள மக்களின் 86 விழுக்காடு குடும்பத்தினர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. டெல்லி, குர்கான், நொய்டா, காசியாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய இடங்களில் மருத்துவமனைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை 22 விழுக்காட்டிலிருந்து 44 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments