அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 99 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயத் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு - மத்திய அரசு

0 1986

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 99 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயத் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்தது.கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். இதில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் பெருந்தொற்று பெரும்பாலும் குறைந்துள்ள நிலையில், தடுப்பூசி சான்றிதழை பரஸ்பரம் அங்கீகரிக்க ஒப்புக் கொண்ட 99 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சர்வதேச வருகைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஏ பிரிவில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 99 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சுய அறிவிப்பு படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த 99 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தங்கள் உடல்நிலையை தங்களை தாங்களே கண்காணித்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணம் மேற்கொள்ளவிருக்கும் 72 மணி நேரத்திற்கு முன் RT-PCR சோதனை நடத்தியிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments