தூத்துக்குடியில் பட்டா, அடங்கல் சான்று வழங்க விவசாயிகளிடம் ரூ.100 லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ!

0 3925

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பயிர் காப்பீடு செய்வதற்குத் தேவையான பட்டா அடங்கல் சான்று பெற விவசாயிகளிடம் 100 ரூபாய் லஞ்சம் பெறுவதாகக் கூறப்படும் வி.ஏ.ஓ ஒருவர், அதுகுறித்து கேள்வி எழுப்பியவரிடம் விதண்டாவாதம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

பயிர்காப்பீடு செய்ய இன்றுதான் கடைசி நாள் என்பதால் விவசாயிகள் அதிகளவில் வி.ஏ.ஓ அலுவலகங்களில் திரண்டனர். மார்த்தாண்டபட்டி வி.ஏ.ஓ வினோத் என்பவர் தனது அலுவலகத்தில் இல்லாமல் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து, அங்கு விவசாயிகளை வரைவழைத்து 100 ரூபாய் லஞ்சம் பெற்று சான்றிதழ் வழங்குகிறார் என்ற புகார் எழுந்தது.

அதுகுறித்து இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, “விவசாயிகள் கொடுக்கிறார்கள் நான் வாங்குகிறேன், உங்களுக்கு என்ன?” என அலட்சியமாக அவர் பேசிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த வீடியோ குறித்து வட்டாசியரிடம் விளக்கம் கேட்டபோது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments