மயிலாடுதுறையில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் பலனில்லாததால் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் யாசகம் பெற்று நூதன போராட்டம்!

0 2034

மயிலாடுதுறையில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி, பலமுறை மனு அளித்தும் பலனில்லாததால் ஒரு நபர் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் யாசகம் பெற்று நூதன போராட்டம் நடத்தினார்.

ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள புதுத்தெரு குண்டும் குழியுமாக இருந்த நிலையில், அண்மையில் ஆட்சியர் அலுவலகம் வரை பாதி சாலை மட்டும் போடப்பட்டு எஞ்சியுள்ள சாலை குண்டும் குழியுமாகவே விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகாரளித்தும் சாலை சீரமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் யாசகம் பெற்று அந்த பணத்தை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் அதிகாரிகளிடம் வழங்கி சாலையை சீரமைக்குமாறு வலியுறுத்தினார். பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்த மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட துறையினரை அழைத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments