பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஃபேன்சிரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டிடம் இடிந்து தரைமட்டம்

0 2059
பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஃபேன்சிரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டிடம் இடிந்து தரைமட்டம்

சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியுள்ளது.

சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் குடியிருப்புகள் அதிகமுள்ள நேரு நகரில் அமைந்துள்ள ராமநாதன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நிகழ்ந்துள்ள இந்த வெடிவிபத்தில் வேல்முருகன், மனோஜ் குமார் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அங்கிருந்த பஞ்சவர்ணம் , கார்த்தீஸ்வரன், சமீதா ஆகிய மூவரும் காணாததால், கட்டிடத்தில் தொடர்ந்து வெடி வெடித்து கொண்டிருந்தாலும், தீயணைப்புத்துறையினர் தங்களது தேடுதல் பணியை விடாமல் தொடர்ந்து வருகின்றனர்.

வீட்டின் உரிமையாளரான ராமநாதன் தப்பி ஓடியுள்ள நிலையில், வெடிவிபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து தங்களது விசாரணையை துவக்கியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments