பெண்ணுக்கு பிரசவம் நடந்து கொண்டிருந்த போது மருத்துவமனை மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

0 2291
ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து

கடலூர் மாவட்டம் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம் நடந்து கொண்டிருந்த போதே, மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரேவதி என்பவருக்கு நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் நடந்துக் கொண்டிருந்தது. அப்போது, பிரசவ அறையின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது.

இதில், ரேவதிக்கு பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவ பணியாளர் செல்வி மற்றும் ரேவதியின் உறவினர் எழில் ராணி ஆகிய இருவரும் காயம் அடைந்த நிலையில், ரேவதிக்கு பிரசவம் முடிந்து அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தொடர் கனமழையால் தண்ணீர் கசிந்து மேற்கூரை உறுதித் தன்மையை இழந்திருந்ததாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments