பல மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய மாணவர்களை மேளதாளத்துடன் ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு

0 1800

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே இயங்கி வரும் வள்ளலார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பல மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய மாணவர்களுக்கு மலர்தூவி மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அங்குள்ள வள்ளலார் தனியார் பள்ளியில் தீபாவளி, தொடர் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பல மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு திரும்பிய மாணவர்களுக்கு மலர்தூவியும், பன்னீர் தெளித்தும், இனிப்பு வழங்கியும் ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments