பொதுஇடங்களில் விபத்துக்களில் பலியாவோருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

0 1719

பொது இடங்களில் ஏற்படும் விபத்துக்களில் பலியாவோருக்குச் சமச்சீரான இழப்பீடு வழங்கும் வகையில் எட்டு வாரங்களில் விதிகளை வகுக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையில் சென்ற போது மரம் சாய்ந்து விழுந்த இரு வெவ்வேறு விபத்துக்களில் பலியான முதியவர், சிறுவன் ஆகியோரின் குடும்பத்தினர் இழப்பீடு கோரித் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

ஒரு சில நேர்வுகளில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படுவதாகவும், சில நேர்வுகளில் 50 இலட்ச ரூபாய், 10 இலட்ச ரூபாய், ஒரு இலட்ச ரூபாய் என இழப்பீடு வழங்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டினார். அரசு வழங்கும் இழப்பீடு, பாதிக்கப்பட்டோர் காப்பீடு கோரத் தடையாக இருக்காது எனக் குறிப்பிட்ட நீதிபதி, உட்கட்டமைப்புகளை முறையாகப் பராமரித்து விபத்துக்கள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments