குஜராத்தில் ரூ. 600 கோடி மதிப்புள்ள 120 கிலோ ஹெராயின் பறிமுதல், 3 பேர் கைது

0 1994

பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 600 கோடி ரூபாய் மதிப்புள்ள 120 கிலோ ஹெராயின் போதைப்பொருளைக் குஜராத் காவல்துறையினர் பறிமுதல் செய்து மூவரைக் கைது செய்துள்ளனர்.

மோர்பி மாவட்டம் நவ்லகி துறைமுகம் அருகே சோதனை நடத்திய குஜராத் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 120 கிலோ ஹெராயினைப் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மூவரைக் கைது செய்துள்ளதாகவும், பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் மாநில டிஜிபி ஆசிஷ் பாட்டியா தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments