19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 34484

அந்தமான் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, வரும் 18ஆம் தேதி வட தமிழ்நாடு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவும் என தெரிவித்த வானிலை மையம், இன்று 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வரும் 19ஆம் தேதியில் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments