5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் ஒப்புதல்

0 2060

இஸ்ரேல் நாட்டில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

அண்மையில் இதே வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கிய நிலையில் இஸ்ரேலும் தற்போது அறிவித்துள்ளது. அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றதால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சிறார்களுக்கு தொற்று பரவி வருவதால் அரசு இந்த முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சிறார்களுக்கு ஃபைசர்-பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியைப் செலுத்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களின் பரிந்துரை ஏற்கப்பட்டதாக இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், சிறார்களுக்கான தடுப்பூசி திட்டம் தொடங்குவதற்கான தேதி வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments