செமஸ்டர் தேர்வு எழுத்துத் தேர்வாக நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

0 12426

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஆன்லைனில் தேர்வுகளை நடத்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நேரடியாகவே தேர்வுகள் நடத்தப்படும் என அப்பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆன்லைனில் தேர்வுகளை நடத்தினால் மாணவர்களின் திறன் கேள்விக்குறியாகும் என்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், தேர்வுகளை நேரடியாக நடத்துவதே உகந்ததாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments