பூந்தமல்லி அருகே தாலியால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை.! 3குழந்தைகளுடன் தலைமறைவான கணவன்

0 2856

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தாலியால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை செய்த கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி கிழக்கு மாட வீதி, ஸ்கூல் தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ்- நந்தினி தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு முன் தான் இந்த வீட்டில் வாடகைக்கு குடி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வெகு நேரமாகியும் ந ந்தினி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த கீழ் வீட்டில் வசிக்கும் அவரது சகோதரி பவித்ரா போலீசில் புகார் செய்துள்ளார்.

போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது  நந்தினி தாலியால் கழுத்தை இறுக்கியும் கட்டையால் தாக்கியும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 குழந்தைகளுடன்  தலைமறைவான கணவன் ஆனந்தராஜை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments