துபாயில் போர்விமான சாகஸ நிகழ்ச்சியில் புதிய விமானத்தைக் களமிறக்கிய ரஷ்யா

0 2046

துபாயில் நடைபெறும் போர்விமான சாகஸ நிகழ்ச்சியில் முதன்முறையாக ரஷ்யாவின் சுகோய் சு 75 Sukhoi Su-75 போர்விமானம் வெளியுலகின் பார்வைக்கு காணக்கிடைத்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் சுகோய் விமானங்களை வாங்க ஐக்கிய அரபு அமீரகம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஐக்கிய அரபுஅமீரகத்தின் குழு ஒன்று ரஷ்யாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து துபாய் விமான நிகழ்ச்சிக்கு சுகோய் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் அமெரிக்காவின் F-35 போர் விமானம் இந்த விமான நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை.அதன் வருகைக்காக அமீரகம் காத்துக் கொண்டிருக்கிறது.சீனாவுடன் ஐக்கிய அரபு அமீரகம் கொண்ட உறவால் அமெரிக்கா தனது போர் விமானங்களை அந்நாட்டுக்கு விற்கும் நடவடிக்கையை தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments