நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 மாணவர்கள் உள்பட 11 பேர் படுகாயம்.!

0 1212

நேபாளத்தின் முஸ்தாங் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 7 மாணவர்கள் உட்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். மலைப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு சுமார் 30 நிமிடங்களுக்கு பனிப்பாறைகள் உருண்டன.

இதனால் அங்கு குடியிருந்தவர்கள் உயிரைக் காக்க மலையடிவாரத்தை நோக்கி ஓட்டம் எடுத்தனர். அங்கிருந்த உள்ளூர் பள்ளியில் தப்பியோட முடியாத மாணவர்கள் சிலர் இதில் பாதிக்கப்பட்டனர். மலைப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் கால்நடைகள் ஆகியவையும் காயம் அடைந்துள்ளன.

அடிக்கடி பனிப்பாறைகள் சரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாறும்படி அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments