கோயம்புத்தூர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் ; தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை சிறையிலடைக்க உத்தரவு

0 4842
பள்ளி முதல்வருக்கு நவ.26 வரை நீதிமன்ற காவல்

கோவையில், பாலியல் தொல்லையால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சின்மயா வித்யாலயா பள்ளி முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பாலியல் தொல்லையால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு துண்டியதாக இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த சின்மயா வித்யாலயா பள்ளி முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யுமாறு மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை போலீசார் கைது செய்தனர். அவரை வரும் 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் மகேஷ் பொய்யாமொழி, பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்துலை எதிர்கொண்டால் 14417 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்று தெரிவித்தனர்.

மாணவியின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காதது, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டங்களாக பள்ளி முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனிடம் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments