கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் வீட்டின் மீது உருண்டு விழுந்த ராட்சத பாறை ; பெண் உயிரிழப்பு

0 2499
கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் வீட்டின் மீது உருண்டு விழுந்த ராட்சத பாறை

தொடர் மழை காரணமாக வேலூரில் உள்ள சிறிய மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 100 டன் எடைக்கொண்ட பாறை உருண்டு ஒரு வீட்டின் ஒரு பகுதி மீது விழுந்ததில் அந்த வீட்டில் இருந்த பெண் உயிரிழந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சிறிய மலை பகுதியில் அமைந்துள்ள ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்த நிலையில், வீட்டிற்குள் இருந்த பிச்சாண்டி, ரமணி, நிஷாத் ஆகியோர் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இதனையடுத்து சம்பவ இடதுக்கு விரைந்த காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மூவரில் ஒருவரான 45 வயது ரமணி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, உருண்டு விழுந்த பாறைகளை அகற்றும் பணியில், அரசு பணியாளர்களோடு இணைந்து, பொதுமக்களும் அகற்றி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments