உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் - பிரியங்கா காந்தி

0 1651
உத்திரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில்,காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

புலந்தஷரில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் காங்கிரஸ், யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என கட்சியின் தொண்டர்கள் தம்மிடம் கேட்டுக் கொண்டதாக கூறினார்.

காங்கிரஸ் வேட்பாளர்களில், பெண்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீடு, ஆட்சிக்கு வந்தால் மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன், இலவச ஸ்கூட்டி, எல்லா நோய்களுக்கும் இலவச சிகிச்சை என பல தேர்தல் அறிவிப்புகளை பிரியங்கா காந்தி அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments