மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் ; முக்கிய அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்

0 4045
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சில் கூட்டம்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

திருப்பதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் அமைச்சர் பொன்முடி, உள்துறை செயலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கேரள, தெலங்கானா மாநில அமைச்சர்கள், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், தென் மாநிலங்களின் பிரச்சனைகள், உட்கட்டமைப்பு வளர்ச்சி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments