ஸைகோவ்-டி தடுப்பூசியை சிறார்களுக்கு உடனடியாக போட மத்திய அரசு அனுமதி அளிக்காது என தகவல்

0 2776
ஸைகோவ்-டி தடுப்பூசியை சிறார்களுக்கு உடனடியாக போட மத்திய அரசு அனுமதி அளிக்காது என தகவல்

12 வயதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கு போடலாம் என தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரால் அனுமதி வழங்கப்பட்டாலும், ஸைகோவ்-டி தடுப்பூசியை அந்த பிரிவினருக்கு உடனடியாக போட மத்திய அரசு அனுமதி அளிக்காது என தகவல் வெளியாகி உள்ளது.

முதற்கட்டமாக இந்த தடுப்பூசி பெரியவர்களுக்கு மட்டுமே போடப்படும் எனவும், மருத்துவ நிபுணர்களின் முழுமையான கருத்துக்களை பெற்ற பிறகே தடுப்பூசியை 12 வயதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கு போடுவது பற்றி முடிவு செய்யப்படும் என சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தடுப்பூசி 3 டோசுகள் போடப்பட வேண்டும் என்ற நிலையில் தங்களுக்கு ஒரு கோடி டோசுகளுக்கு சுகாதார அமைச்சகம் ஆர்டர் வழங்கி உள்ளதாக ஸைகோவ்-டி தயாரிப்பாளரான ஸைடஸ் கெடிலா தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments