வெள்ளத்தில் சிக்கிய முதியவர் ; கொட்டும் மழை, சீறிப்பாயும் வெள்ளத்துக்கு நடுவே முதியவரை மீட்ட தீயணைப்பு துறையினர்

0 2183
கொட்டும் மழை, சீறிப்பாயும் வெள்ளத்துக்கு நடுவே முதியவரை மீட்ட தீயணைப்பு துறையினர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட முதியவரை கொட்டும் மழைக்கு இடையிலும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

விஸ்வநாதன் என்ற அந்த முதியவர், தனது ஏழு மாடுகளையும் கொசஸ்தலை ஆற்றைக் கடந்து மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். திடீரென ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், மீண்டும் வீடு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டார்.

தகவல் அறிந்து சென்ற திருத்தணி தீயணைப்புத் துறையினர் கொட்டும் மழையிலும், சீறிப்பாய்ந்த வெள்ளத்துக்கு நடுவேயும் அக்கரைக்கு சென்று முதியவரை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.

அவர் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற 7 மாடுகளும் அக்கரையிலேயே சிக்கிக் கொண்டன. ஆற்றில் நீர்வரத்து குறைந்தால் மட்டுமே மாடுகளை மீட்க முடியும் என தீயணைப்புத் துறையினர் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments