மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

0 1910
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அரிசி, மளிகைப் பொருட்கள், பாய், போர்வை, பிரட், பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் வழங்கினார். வில்லிவாக்கத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியதோடு, கொரோனா தடுப்பூசி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் ஆகியவற்றை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

அங்கு வந்திருந்த பொதுமக்களோடு கலந்துரையாடிய முதலமைச்சர், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். மனு கொடுத்தவர்கள் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments