இந்தோனேசியாவின் Pertamina எண்ணெய் சுத்தரிப்பு நிலையத்தில் தீ விபத்து

0 1474

இந்தோனேசியாவின் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான  Pertamina நிலையத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் 34 சதவீத எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் Cilacap-ல் உள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான Pertamina-வின் 228 எண்ணெய் தொட்டிகளில் ஒரு தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த தீ விபத்தால் சுத்திகரிப்பு நிலையத்தின் அன்றாட செயல்பாடுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை எனவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ நிக்கெ வித்யாவதி  தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments