நிலச்சரிவால் 4ஆவது முறையாக தமிழகம்-கர்நாடகா இடையே போக்குரத்து பாதிப்பு

0 3278

தொடர் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலைப் பாதையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் தமிழக கர்நாடகா இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் அருகே உள்ள செட்டி நொடி என்ற இடத்தில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் வரட்டுப்பள்ளம் வனச்சோதனை சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

சாலையில் விழுந்து கிடக்கும் பாறைகளை வெடிவைத்து தகர்த்த பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், ஏற்கனவே கடந்த மாதம் 2 முறை, இந்த மாதம் 8ஆம் தேதி ஒரு முறை என 4ஆவது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments