எனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பாகுபாடுகள் எதுவும் இல்லை - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்

0 6231

தமக்கும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே எவ்வித பாகுபாடும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

வடபழனி, எழும்பூர், புதுப்பேட்டை, துறைமுகம், கொருக்குப்பேட்டை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அவர், காசிமேடு பகுதியில் நிவாரணம் வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

2015ஆம் ஆண்டு பெருமழை வெள்ள பாதிப்புக்குப் பின் அதிமுக எடுத்த நடவடிக்கைகளால் தான் தற்போதைய மழையில் பாதிப்பு குறைந்துள்ளது என அப்போது அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments