சென்னையில் முழுவீச்சில் நடைபெறும் மழை நீர் அகற்றும் பணி

0 1920

கனமழையால் சென்னையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நகரில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, சென்னையில் மழை நீர் தேங்கிய 778 இடங்களில் 574 இடங்களில் தண்ணீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அமைக்கப்பட்ட 69 நிவாரண முகாம்களில் 3,492 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மழையால் சேதமான மந்தைவெளி ஆர்.கே.மடம் சாலை, தியாகராய நகர் திருமலை பிள்ளை சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments