11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... தலைமறைவான மருத்துவர் மீது போக்சோ வழக்கு

0 3632

கரூரில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் இயங்கி வருகிறது சி.ஜி. மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், காசாளராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், பள்ளி முடிந்ததும் தனது தாயைப் பார்க்க, அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் மருத்துவமனையில் பணியாற்றும் ரஜினிகாந்த் என்ற மருத்துவர், தனது அறையில் வைத்து மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அப்பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

மருத்துவமனையின் மேலாளர் சரவணன் என்பவரும் அதற்கு உடந்தை என அவர் கொடுத்த புகாரின் பேரில் சரவணனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மருத்துவர் ரஜினிகாந்த்தை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments