அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு

0 2142
அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு

சிபிஐ இயக்குநர் மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசரச்சட்டம் பிறப்பித்துள்ளது.

இந்த அவசரச்சட்டத்தில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கையெழுத்திட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இரண்டு ஆண்டுகளாக இருக்கும் அவர்களின் பதவிக்காலம், அது முடிந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு மேலும் 3 ஆண்டுகளுக்கு அவர்கள் பதவியில் தொடர்வார்கள்.

அமலாக்கத்துறையின் இயக்குநராக தற்போது இருக்கும் எஸ்கே மிஸ்ராவின் பதவிக்காலம் அடுத்த வாரம் நிறைவடைய உள்ளது. இந்த  நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மிகவும் அசாதாரணமான சூழலில் மட்டுமே பதவி நீட்டிப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments