இந்தியாவுக்கான S-400 Triumf ரக ஏவுகணை விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தகவல்

0 2992

தரையிலிருந்து வான் நோக்கி தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் S-400Triumf ரக ஏவுகணைகள் இந்தியாவுக்கு விநியோகம் செய்ய தொடங்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு இந்த ஏவுகணகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2018 ஆம் அண்டு அக்டோபர் மாதத்தில் செய்யப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி S-400 Triumf ஏவுகணைகளின் விநியோகம் நடந்து வருவதாக ரஷ்யாவின் Federal Service for Military-Technical Cooperation இயக்குனர் Dmitry Shugaev தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த ஏவுகணைகள் ஏற்கனவே சீனா மற்றும் துருக்கியில் பயன்பாட்டில் உள்ள நிலையில், மத்திய கிழக்கு, ஆசிய பசிஃபிக் மற்றும் ஆப்பிரிக்காவின் 7 நாடுகளுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments