பட்டப்பகலிலேயே குடியிருப்பு பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

0 4130

தேனி ஆண்டிப்பட்டி குடியிருப்பு பகுதியில் நடந்து சென்ற மூதாட்டியிடமிருந்து மர்மநபர்கள் பட்டப்பகலில் செயினைப் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள தெருவில் ரம்யாதேவி என்ற மூதாட்டி நடந்து செல்கையில் இருசக்கரவாகனத்தில் வந்த இரு நபர்கள் செயினை பறித்து, மூதாட்டியை கீழே தள்ளியுள்ளனர்.

மூதாட்டியின் கதறல் சத்தம் கேட்டு வெளியில் வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில், இருமாதங்களுக்கு முன் ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் செயின்பறித்த நபர்களே இந்த செயின் பறிப்பிலும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments