கோவையில் திருடனை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடித்த போலீசார் - சிசிடிவி காட்சி

0 17357

கோவையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தவனை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று பிடித்த சூலூர் போலீசாரின் Chasing சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நீலம்பூர் பைபாஸ் சாலையில், சூலூர் ஆய்வாளர் மாதையனும், மற்றொரு காவலர் ஒருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரிடம் விசாரித்துள்ளனர்.

அதற்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த இருவரும் திடீரென பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை போலீஸ் வாகனத்திலேயே விரட்டிக் கொண்டு ஆய்வாளரும், காவலரும் சென்ற நிலையில், முதலிபாளையம் பிரிவு அருகே சென்ற மர்ம நபர்கள் இருவரும் பைக்கை போட்டுவிட்டு, ஆளுக்கொரு திசையில் ஓட்டமெடுத்தனர்.

இருப்பினும், விடாத போலீசார் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு, பின்னாடியே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று காட்டுப்பகுதிக்குள் வைத்து ஒருவனை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மற்றொரு திருடனை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments