புதுச்சேரியில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் தகராறு இரண்டு இளைஞர்களை பட்டப்பகலில் பொது இடத்தில் வைத்து தாக்கும் வீடியோ

0 12007

புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கலால் ஏற்பட்ட தகராறில் பொது இடத்தில் வைத்து இருவரை ரவுடிகள் தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

குமார் என்பவரிடமிருந்து புடவை வியாபாரியான ஜான்பால் ஓராண்டுக்கு முன் கடனாகப் பெற்ற 30 ஆயிரத்தில்  20 ஆயிரத்தை சில மாதங்களுக்கு முன் திருப்பி கொடுத்துள்ளார்.

வாங்கிய கடனில் 10 ஆயிரமே பாக்கியிருந்ததாகவும், ஜான்பாலை நேரில் பேச  அழைத்த குமாரின் நண்பர் பிரகாஷ், ரவுடி தட்டாஞ்சாவடி முத்துவுடன் சேர்ந்து திருப்பித்தர வேண்டிய பணத்தை விட பன்மடங்காக கேட்டு மிரட்டியதோடு, ஜான்பாலை, அவரது சகோதரரையும் சராமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பிய இருவரும் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குமாரின் நண்பர் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள ரவுடி தட்டாஞ்சாவடி முத்து மற்றும் அவரது சகாக்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments