சாலையைக் கடக்க முயன்ற ஆட்டோ மீது மோதிய பைக் பதறவைக்கும் சிசிடிவி காட்சி

0 20965

மதுரை உசிலம்பட்டி அருகே, திடீரென சாலையைக் கடக்க முயன்ற ஷேர் ஆட்டோ மீது பைக் மோதியதில், பைக்கில் வந்த இருவரும் பல்டி அடித்து கீழே விழுந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

செட்டியப்பட்டியில் இருந்து உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த ஷேர் ஆட்டோ, மாதரை கிராமத்தில் ஆட்களை ஏற்றுவதற்காக எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென சாலையைக் கடந்து வலது புறமாக செல்ல முயன்றது. அப்போது, பின்னால் வேகமாக வந்த பைக் ஆட்டோ மீது பயங்கரமாக மோதிய நிலையில், பைக்கில் வந்த இருவரும் பல்டி அடித்து கீழே விழுந்தனர்.

வந்த வேகத்தில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்டோ மீது மோதி காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இடதுபுறத்தில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ, இண்டிகேட்டரும் போடாமல் திடீரென வலதுபுறத்திற்கு சாலையை கடந்து சென்ற நிலையில், இதனை சற்றும் எதிர்பாராததால் பைக்கில் வந்தவர்கள் ஆட்டோ மீது மோதி விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments