ஏழைகள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.700 கோடி நிதி... பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துகிறார் பிரதமர் மோடி

0 2667

பிரதமரின் அவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் திரிபுரா மாநிலத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு என்ற திட்டத்துக்கு முதல் தவணையை இன்று பிரதமர் மோடி செலுத்துகிறார்.

முதல் முறையாக திரிபுரா மாநிலத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சுமார் 700 கோடி ரூபாய் நிதியை முதல் தவணையாக பிரதமர் மோடி இன்று செலுத்துகிறார்.

தொடர்ந்து, பயனாளிகளுடன் அவர் காணொலி வாயிலாக உரையாட இருக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பயன் பெறுகின்றனர்.

திரிபுராவில் ஏராளமானோர் பலமில்லாத வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த நிதியுதவி மூலம் அவர்கள் தங்கள் வீடுகளை பலமாக மாற்றிக் கொள்ள முடியும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments