ரூ.2 கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது

0 4841

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே 2 கோடி ரூபாய் மதிப்புடைய திமிங்கல உமிழ்நீரை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளப்பள்ளம் கடற்கரையில் நாகை  க்யூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்த பாலகுரு, சத்தியானந்தம் என்பது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 2 கிலோவுக்கு மேல் எடை கொண்ட  அம்பர்கிரீஸ்  என்ற திமிங்கல உமிழ்நீர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாசனைப் பொருட்கள் தயாரிக்கவும், உயர்ரக மதுபானம் தயாரிக்கவும் அம்பர்கிரீஸ் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments