இந்தோனேசியா: எண்ணெய் நிறுவன எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து... இருளையே விழுங்கும் அளவுக்கு வெளியேறிய தீ!

0 2425

இந்தோனேசியாவில் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் இருளையே விழுங்கும் அளவுக்கு காட்டுத் தீ வெளியேறியது.

சிலாகேப் நகரில் உள்ள பெர்டமினா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நாலாபுறமும் பரவிய தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். விபத்து எப்படி நேர்ந்தது என விசாரித்து வருவதாக தெரிவித்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அருகில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதால் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments