பெற்ற தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய கல்நெஞ்சுக்கார பிள்ளைகள்: கொட்டும் மழையில் உணவுக்கு கையேந்தும் நிலையில் 90வயது மூதாட்டி

0 4758

மயிலாடுதுறை அருகே அரசின் உத்தரவையும் மீறி 90வயது மூதாட்டியை மழையில் பிள்ளைகள் விரட்டி விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வாணாதிராஜபுரத்தை சேர்ந்த கணவனை இழந்த தாவூத்பீவி என்ற 90வயது மூதாட்டியை அவரது இரு மகன்களும் சொந்த வீட்டில் இருந்து துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் 4ஆம்தேதி நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்ட மூதாட்டி தன்னுடைய நிலைமையை சொல்லி உதவி கேட்டார். இதனை அடுத்து வருவாய்த்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து  இளைய மகன் அசரஃப் அலி வீட்டில் அந்த மூதாட்டியை ஒப்படைத்து பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லி தங்க வைத்தனர்.

இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன் மழை நேரத்தில் அந்த மூதாட்டி மீண்டும் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் மழையில் நனைந்தபடியே எதிர்வீட்டில் உணவு வாங்கி சாப்பிட்டு வரும் அந்த மூதாட்டி  தான் உயிர் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments