தாய்-மனைவி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாஜக பிரமுகர் வீட்டில் ரூ.14 லட்சம், நகை கொள்ளை

0 2825

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பெண்கள், குழந்தைகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை , பணத்தை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமங்கலம் பைபாஸ் ரோட்டில் பழனியாபுரம் முத்தையா நகரில் வசிக்கும் விஜயேந்திரன் என்பவர்  பா.ஜ.க., இளைஞரணி மாவட்ட செயலாளராக இருப்பதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

நேற்று மாலை 6 மணி அளவில் அவரது வீட்டிற்கு வந்த 4 பேர் தாய் மற்றும் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 37 சவரன் நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் பணம் மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பான  டாக்குமெண்டுகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments