நிலம், நகைகளுக்காக அக்காவை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற தம்பி

0 2846

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நிலம் மற்றும் நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய  தம்பி கைது செய்யப்பட்டான்.

அம்மணம்பாக்கத்தைச்  சேர்ந்த செல்லம்மாள் என்பவர் கடந்த 2ஆம் தேதி அவரது வீட்டில் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த அச்சரப்பாக்கம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரது தம்பி சுப்பிரமணியை பிடித்து விசாரித்தனர். அப்போது நகை, மற்றும் நிலம் தொடர்பாக அக்காவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதும், சம்பவத்தன்று ஆத்திரத்தில் இரும்புக்கம்பியால் தலையில் அடித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து  சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments