மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் திருப்பதியில் இன்று 29 வது தென்மண்டல கவுன்சில் மாநாடு

0 2098

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் திருப்பதியில் இன்று 29 வது தென்மண்டல கவுன்சில் மாநாடு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய அரசுகளின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்வது உறுதிசெய்யப்படவில்லை. அவர்கள் காணொலி வாயிலாக இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லைப் பிரச்சினைகள், நதிநீர்ப் பங்கீடு, போக்குவரத்து, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

முன்னதாக தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க திருப்பதி வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்றார். பின்னர் திருமலை ஏழுமலையான் கோவிலில் அமித் ஷா பெருமாளை தரிசனம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments