சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறப்பு

0 6474

மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

இதையடுத்து மறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும்.

அதனை தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும்.  அடுத்த மாதம் 26-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 30 ஆயிரம் வீதம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments