இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாட்டம் !

0 2054
இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாட்டம் !

எல்லா குழந்தைகளுக்கும் தனித்தனியாக ஒரு பிறந்த நாள் இருக்கிறது. ஆனால் எல்லா குழந்தைகளுக்குமான ஒரு நாள் தான் இன்று .பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக இன்று கொண்டாடப்படுகிறது.அது குறித்த செய்தித் தொகுப்பை காண்போம்.

பிறக்கும்போது தெய்வத்தின் ஸ்வரூபங்களாகவே பிள்ளைகள் பிறக்கின்றன. கள்ளம் கபடமில்லாத அவர்களின் உள்ளங்களில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகிறது.

பிள்ளைகள் எல்லோரையும் நட்பாக்கிக் கொள்ளத் தெரிந்தவர்கள். அவர்கள் பார்வையில் பேதங்கள் இல்லை. அன்பு மட்டும் தான் அவர்கள் கேட்பதும் வாரி வழங்குவதும்....அது தான் அவர்களின் தாரக மந்திரம்.

குடும்பங்களைக் காக்கக் கூடிய இளைஞர்களாகவும் தேசத்தைக் காக்கக் கூடிய வீரர்களாகவும் வளர்கிற பிள்ளைகளால் அனைவருக்குமே பெருமை.

ஆதரவற்ற குடும்பங்கள், அமைதி இல்லாத குடும்பங்களிலும் குழந்தைகளின் இருப்பும் வருகையும் புதிய வாழ்க்கைக்கான வாசல்களைத் திறக்கின்றன. குழந்தைகளைக் கொண்டாடும் இன்றைய நாளில் அவர்களுடன் நேரம் செலவழிப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் பிரதிபலன் ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments